வெங்காயத்துக்கேற்ற இரண்டு பட்டங்கள்!

“சின்னவெங்காயத்துக்கு, சம்பா பட்டம் (ஆனி முதல் ஆவணி மாதம் வரை), குறுவைப்பட்டம் (ஐப்பசி முதல் தை மாதம் வரை) ஆகிய இரண்டு பட்டங்களும் சிறந்தவை (இவர் சம்பா பட்டத்தில் வெங்காயம் நடவு செய்திருக்கிறார்). சம்பா பட்டத்தில் விதைக்க வேண்டுமென்றால், வைகாசி மாதக் கடைசியிலேயே ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை உழவு செய்து காய விட வேண்டும். குறுவைப் பட்டத்தில் விதைப்பவர்கள் என்றால், புரட்டாசி மாதக் கடைசியில் ஆட்டுக்கிடை அமைத்து காய விடலாம். சம்பா சாகுபடிக்கு ஆனி மாதமும், குறுவைக்கு ஐப்பசி மாதமும் ஓர் உழவு அடித்துவிட்டு... உழவடித்த அன்றே 10 அடி நீளம் 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். 60 சென்ட் நிலத்துக்கு 250 பாத்திகள் வரை வரும். பாத்தி எடுத்த உடனே தண்ணீர் பாய்ச்சி, தலைப்பகுதி மேலே இருக்குமாறு வெங்காயத்தின் முக்கால்பகுதியை மண்ணுக்குள் புதைத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, 4-ம் நாள் மற்றும் 9-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.

நுனிக்கருகலுக்கு, வேப்பங்கொட்டைக் கரைசல்!

நடவு செய்த 10-ம் நாளில் இருந்து, அறுவடை வரையிலான காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் நுனிக்கருகல் நோய் தாக்கலாம். இந்நோய் தாக்கினால், வெங்காயத்தாள் நுனியில் வெள்ளை நிறமாக காய்ந்தது போல இருக்கும். தாளுக்குள் துளைபோட்டு புழுக்கள் சென்று வெங்காய விளைச்சலைப் பாதிக்கும். ரசாயன முறை சாகுபடியில் இந்நோய் அதிகமாக வரும். இயற்கை முறையில் நோய்த் தாக்குதல் குறைவுதான். அப்படியே வந்தாலும், வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்து சரி செய்து விடலாம். தாள் காய்ந்தது போலக் காணப்பட்டாலே இக்கரைசலைத் தெளித்துவிட வேண்டும்.

பளபளப்புத் தன்மைக்கு, மீன் அமினோ அமிலம்!

நடவு செய்த 15-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 45 மற்றும் 60-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். வெங்காயத்துக்கு நிறம் கூட்டவும், பளபளப்புத் தன்மையை உருவாக்கவும் ரசாயன விவசாயத்தில் ரசாயனக் கலவை ஒன்றைத் தெளிப்பார்கள். ஆனால், மீன் அமினோ அமிலம் தெளித்தால் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறமும், பளபளப்பும் கிடைத்துவிடும். 70-ம் நாள் வெங்காயத்தை அறுவடை செய்து விடலாம

Comments

Popular posts from this blog

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!