விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

🌿 விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.

🌿 ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

🌿 ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.

🌿 மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.

🌿 தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் :

🍁 வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயத்தை பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றை பயிரிடலாம்.

🍂 சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி மாதங்களில் அவரையை பயிரிட்டு வளர்த்தலாம். ஆடி, மாசி மாதம் கத்தரி பயிரிடுவதற்கு ஏற்ற பட்டமாகும்.

🌾 மாசி, பங்குனி மாதங்கள் வெண்டை பயிரிடுவதற்கு ஏற்ற பட்டமாகும். வைகாசி, ஆனி, மார்கழி, கார்த்திகை மாதங்கள் மிளகாய், கொத்தவரை போன்ற காய்கறி செடிகளை பயிரிடலாம்.

🍂 ஆடி, கார்த்திகை, மாசி மாதம் சு ரியகாந்தி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சுண்டலை பயிரிடலாம்.

🌾 புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நெல் பயிரை பயிரிடலாம். ஆடி, மாசி மாதம் உளுந்து விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும்.

🌱 மாசி, பங்குனி மாதங்கள் கம்பு விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும். சித்திரை, மாசி, கார்த்திகை மாதங்கள் சோளம் விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும்.

🍁 ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தென்னை நடவிற்கு ஏற்ற பருவங்களாகும். கார்த்திகை, மார்கழி மாதங்கள் வாழை நடவிற்கு ஏற்றது.

🍂 ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்கள் பருத்தி சாகுபடிக்கு ஏற்றது. ஆடி மாதத்தில் பயிறு வகைகளான தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை போன்ற தானியங்களை விதைவிக்கலாம்.

🌾 ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு போன்றவை ஆண்டுமுழுவதும் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களாகும்.

🌱 எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.

🌱 நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.
📙 மழுங்கடிக்கப்பட்ட மரபு வழி வேளாண்மையை மீட்டெடுக்கும் மண்வெட்டியாக திகழும் 📙

Comments

Popular posts from this blog

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!